இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் நரேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்றுடன் மழைப்பொழிவு குறையத் தொடங்கும் என்றும், நாளை லேசான மழைக்கு பிறகு வானிலை சீராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



