ஊதியம் வழங்கப்படாத கூடுதல் வேலைகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஏடிபி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாரத்திற்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் சம்பளம் இன்றி பணியாற்றுபவர்களின் விகிதம் இந்தியாவில் 24 சதவீதமாக உள்ளது. உலகளாவிய ஒப்பீட்டின்படி, வாரத்திற்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக ஊதியமின்றி பணிபுரிபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த கூடுதல் பணிச்சுமையால் பணியாளர்கள் இடைவேளை நேரங்களிலும் வேலை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். மேலும், இதனால் மன அழுத்தம் அதிகரித்தல், பணித்திறன் குறைதல் மற்றும் புதிய வேலை தேடும் மனநிலைக்கு பணியாளர்கள் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயர் மேலாளர்கள் மற்றும் கீழ்நிலை பணியாளர்கள் என இரு தரப்பினரும் இந்த கூடுதல் பணிச்சுமையால் பாதிக்கப்படுகின்றனர்.



