இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது 900 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1,170 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் வழித்தடங்களுடன் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடையும் போது, இந்தியா விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 11,000 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்களுடன் சீனா முதலிடத்திலும், 1,386 கிலோமீட்டர் வழித்தடங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



