சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தால் மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படும் என்றும், கடலோரச் சூழலியல் மற்றும் பொதுமக்களின் கடற்கரை அணுகல் வசதிகள் சீர்குலையும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
