அமெரிக்க காங்கிரஸுக்கான தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றால், வயது வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். டல்லாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தத் தொகையை 'ட்ரம்ப்பின் ஈவுத்தொகை' என்று குறிப்பிட்டார்.
ஈரான் விவகாரத்தால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கம்யூனிஸ அச்சுறுத்தலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க குடியரசு கட்சியின் வெற்றி அவசியம் என்றும், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தலாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது ஈவுத்தொகை அல்ல, லஞ்சம் என்று சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி பின்னடைவைச் சந்திக்கக்கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.




