தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 21 மாவட்டங்களில் இந்த வானிலை நிலவும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

