விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ, தற்போது 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் முல்லை பூ 900 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,000 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே சந்தைக்கு கொண்டு வரப்படும் பூக்கள், மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பண்டிகை கால தேவை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் இந்த விலை உயர்வு கவனத்தை ஈர்த்துள்ளது.



