முதலமைச்சர் விஜய்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, திமுகவினர் சிலர் அநாகரிகமாகப் பேசியதற்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.



