பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை டெல்லியில் அக்கட்சி தொடங்கியுள்ளது. I.N.D.I.A கூட்டணியில் காங்கிரஸுடன் முரண்பாடு கொண்ட கட்சிகளைத் தங்கள் அணியில் இணைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மும்பையில் உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்துப் பேசியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மூன்றாவது அணியை அமைப்பதற்கான தொடக்க முயற்சியே இதில் முக்கியமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



