திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி பேசுவதும், அதை கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியாதவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டிக்குமாறு வலியுறுத்தியுள்ள சண்முகம், அவரது தாயாரை இழிவுபடுத்தும் செயலை திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அந்தந்த கட்சி தலைமை அவர்களை கண்டித்து ஒழுங்குபடுத்த முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில திமுகவினர் கண்ணியம் தவறுவது தொடர்வதாகவும், கட்சியில் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் கடமையை திமுக தலைவர் செய்வார் என நம்புவதாகவும் பெ.சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
