காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரத் தட்டுப்பாடு நிலவியதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு தமிழகத்தில் மட்டுமல்லாது பெரும்பாலான மாநிலங்களிலும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

