பிள்ளையார் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 2,379 பேருந்துகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வில் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட 400 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 10.31 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F12%2Fnellaiprotestpowercut-2026-09-12-11-06-47.jpg&w=3840&q=75)