சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 1,562 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த சிலைகள் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன.
பாதுகாப்பு பணிக்காக 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உரிய அனுமதி இன்றி சிலைகளை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.


