கோயம்புத்தூரில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணைக்காக குற்றவாளியை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெண் இன்ஸ்பெக்டரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார்.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காகவும் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் காவல்துறையினர் அந்த நபரைச் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றவாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


