திராவிடர் கழகம் சார்பில் நடைபெறவுள்ள ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என ஈரோடு மாவட்ட காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 17-ம் தேதி இந்த ஊர்வலம் நடைபெற உள்ளது.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 17-ம் தேதி காலை 10:30 மணிக்கு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி, திராவிடர் கழகத்தினர் செப்டம்பர் 14-ம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
