தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று மாலை முதல் நாளை வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று 400 கூடுதல் பயண நடைகளும், நாளை அதிகாலை முதல் கூடுதலாக 150 பயண நடைகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


