மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வைக் கொண்டாடும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிலின் ராஜகோபுரங்கள் லேசர் மற்றும் வண்ணமயமான அலங்கார விளக்குகளால் ஒளிரவிடப்பட்டுள்ளன. இந்த ஒளி வெள்ளத்தில் கோவில் கோபுரங்கள் ஜொலிக்கும் காட்சி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

