நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துகளை முதல்வர் விஜய்க்கு எதிரானதாகக் கருதி, அவரை விமர்சிப்பதும் இழிவுபடுத்துவதும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மற்ற கட்சிகளுக்கு இல்லாத கோபம், அமைச்சர் முதல் தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டும் என்றும், கேள்விகளுக்குப் பதிலால் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தங்களுக்குப் பிடித்த கருத்துகளை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது ஜனநாயகமல்ல. வசைபாடல்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் கருத்துரிமையை முடக்க முயற்சிக்க வேண்டாம் என சீமான் எச்சரித்துள்ளார்.


