சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவ பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி, மக்களின் கருத்துகளைக் கேட்காமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் திட்டம் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ள மீனவ பிரதிநிதிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.


