நாஷ்வில்லில் உள்ள ரிவர்பெண்ட் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில், கிறிஸ்டா பைக் (50) என்பவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பெண்டோபார்பிட்டல் மருந்தின் இரண்டு அளவுகள் செலுத்தப்பட்டும் அவர் உயிருடன் இருந்ததால், அவருக்கு மருத்துவ உதவி கோரி அவரது வழக்கறிஞர்கள் அவசர மனுவைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 1995-ம் ஆண்டு 19 வயதுடைய காலீன் ஸ்லெம்மர் என்பவரைக் கொலை செய்த வழக்கில், 1996-ம் ஆண்டு பைக் மரண தண்டனை பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை தண்டனையை நிறைவேற்றும் பணிகள் தொடங்கின.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான, மூன்றாம் தரப்பு விசாரணைக்கு ஆளுநர் பில் லீ உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருந்த அனைத்து மரண தண்டனைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தண்டனை நிறைவேற்றத்தின் போது நரம்புகளில் ஊசி செலுத்துவதில் சிக்கல் இருந்ததாகவும், பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் வீரியம் குறைவாக இருந்ததாகவும் பைக்கின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறைத்துறை அதிகாரிகள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியதாகக் கூறினாலும், இந்தத் தோல்விக்கான காரணங்கள் குறித்து கூடுதல் தகவல்களை அரசு வெளியிடவில்லை.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F10%2F12%2F10-2026-10-12-13-50-12.jpg&w=3840&q=75)

