2036-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா மற்றும் கத்தார் உள்ளிட்ட ஏழு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா அகமதாபாத் நகரையும், கத்தார் வளைகுடா நாடுகளுடன் இணைந்து நடத்தும் திட்டத்தையும் முன்வைத்துள்ளன. இவற்றுடன் தென் ஆப்பிரிக்கா (கேப் டவுன்), தென் கொரியா (சியோல்), ஜெர்மனி (மியூனிக்), ஹங்கேரி (புடாபெஸ்ட்) மற்றும் துருக்கி (இஸ்தான்புல்) ஆகிய நாடுகளும் போட்டியை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டே போட்டிகளை நடத்துவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கோவென்ட்ரி தெரிவித்துள்ளார். புதிய நாடுகள் விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம், நிர்வாகக் குழு தகுதியான நாடுகளின் பட்டியலை இறுதி செய்யும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, 2029-ஆம் ஆண்டில் வாக்கெடுப்பு மூலம் போட்டியை நடத்தும் நாடு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

