தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எழுந்துள்ள ரூ.2 கோடி லஞ்ச புகாரை மீண்டும் விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றிய காலத்தில், சாலை திட்ட ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


