தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை இன்று (நவம்பர் 5) தொடங்குகிறது. இந்த விற்பனை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அமைச்சர் காந்திராஜ் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்தச் சிறப்புத் தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் நான்கு நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்குக் காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.



