ஆவடி அருகே அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவரை மாணவர்கள் குழு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் பேருந்து நடத்துனருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவுகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



