ஆந்திர மாநிலம் பலமனேர் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பிரசாத் ரெட்டி, வாக்காளர்களிடம் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வீடியோவில் பேசிய அவர், "10 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியே நான் பணம் கொடுத்தேன். எனக்கு வாக்களிக்காத 400 பேரும் அந்தப் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். இல்லையெனில் மாரியம்மா சும்மா விடமாட்டாள். நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அந்தப் பணத்தைக் கொண்டு நிறைவேற்றித் தருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.




