அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாக்கம் எதிரொலியாக, தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக காலை நேரங்களில் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில், தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட சந்தை மாற்றங்கள் காரணமாக, நேற்று நண்பகல் 12 மணியளவில் தங்கம் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.
4,680 வரை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 285 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
13,385 ஆகவும், சவரனுக்கு ரூ. 2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,07,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, நேற்று மதிய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 13,100க்கும், ஒரு சவரன் ரூ. 1,04,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், 18 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் ரூ. 220 அதிகரித்து ரூ.
10,955க்கும், ஒரு சவரன் ரூ. 1,800 அதிகரித்து ரூ. 87,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ. 210க்கும், ஒரு கிலோ ரூ. 2,10,000க்கும் விற்பனையாகிறது.



