டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) இந்தியாவின் மக்கள் தொகையை நிகழ்நேரத்தில் காட்டும் டிஜிட்டல் பலகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்கும் இந்தத் திரையில், மக்கள் தொகை 150 கோடியை நெருங்கி வருவது குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை நேரடி காட்சியாகப் பிரதிபலிக்கும் இந்த டிஜிட்டல் பலகை, பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

