அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே கொல்கத்தா-சாய்ராங் விரைவு ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மிசோரமில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ரயிலின் இன்ஜினும் தடம் புரண்டுள்ளது. இதில் பயணம் செய்த பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

