அமெரிக்காவில் நீண்டகாலமாக நீடித்த பணவீக்கத்துக்கு பிறகு, பணவியல் கொள்கை உருவாக்கும் முறையை மறுசீரமைக்கும் நோக்கில், பெடரல் ரிசர்வ் தனது நிதிநிலை (Balance Sheet) செயல்பாடுகளை ஆய்வு செய்யும் சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், டெல்லியில் பிறந்து அமெரிக்காவில் பணியாற்றி வரும் பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஆஷா சர்மா ஆகிய இந்திய வம்சாவளியினரும் இடம் பெற்றுள்ளனர்
புதிய பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் அறிவித்துள்ள ஐந்து சிறப்பு பணிக்குழுக்களின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் மெர்வின் கிங், வால்மார்ட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டக் மெக்மில்லன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் சார்ஜென்ட், சிலிக்கான் வேலி முதலீட்டாளர் மார்க் ஆண்ட்ரீசன் உள்ளிட்டோரும் இந்த சீர்திருத்த முயற்சியில் இடம்பெற்றுள்ளனர்.
2Likes
0Dislikes


