புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், பட்டியலின சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த தேரோட்டத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள் உற்சவர் சிலையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், உற்சவர் மண்டபத்திற்கும் பூட்டுப் போட்டனர். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
0Likes
0Dislikes

