கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. மக்கள் தொகை குறைவாக இருப்பதை காரணமாகக் காட்டி, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு இத்திட்டத்தை முதன்முதலில் நிராகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே மாதம் மீண்டும் இத்திட்டத்திற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.
இந்த பரிந்துரையை மீண்டும் பரிசீலித்த மத்திய அரசு, தற்போதைய சூழலில் மெட்ரோ ரயில் திட்டத்தால் பயண நேரம் பெரிய அளவில் குறையாது என்று தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, கோவை மற்றும் மதுரை நகரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
0Likes
0Dislikes


