குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறட்சி காரணமாக அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயரக்கூடும் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை அதிகரித்துள்ளது.
முன்னதாக ரூ.1,300க்கு கிடைத்த 25 கிலோ அரிசி மூட்டை தற்போது ரூ.1,600 வரை விற்பனையாகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு அரிசி விலை உயர்வு தொடரும் என அரிசி வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு தமிழ்நாட்டிலும் அரிசி விலையை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
0Likes
2Dislikes


