அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தி வீடியோ அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. சக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



