காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மற்றும் விரிவான திட்ட அறிக்கை இன்றி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மக்களவையில் தமிழ்நாடு எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்பு காட்டி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த பதில் முக்கியத்துவம் பெறுகிறது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




