மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 4 மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

