தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பெயர் 'தகவல் ஒருமைப்பாட்டு பிரிவு' (Information Integrity Desk - IID) என மாற்றப்பட்டுள்ளது. இப்பிரிவின் தலைவராக, ஆன்லைன் தளபதி ரசிகர் மன்றத்தின் நிறுவனரும், தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் பொறுப்பாளருமான குரு (எ) குரு தலைவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் சமூக ஊடகப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
தவறான தகவல்கள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளைக் கண்டறிந்து, அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது, ஆதாரங்களுடன் கூடிய விளக்கங்களை வெளியிடுவது மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பது ஆகியவையே இப்பிரிவின் முக்கிய பணிகளாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவின் தலைவராக குரு செயல்பட, பிரசன்னா முதன்மைப் பொறுப்பாளராகவும், சுஜிதா மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

