வட கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், புதுச்சேரி ஆகிய இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


