தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் நடத்திய ரகசிய செயல்திறன் மதிப்பாய்வின் அடிப்படையில், தமிழக அமைச்சரவையில் தனது முதல் மாற்றத்தைச் செய்ய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் இந்த அமைச்சரவை மாற்றம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறன் குறைபாடு மற்றும் பல்வேறு புகார்கள் காரணமாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கே.ஜகதீஸ்வரி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் ஆகிய நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், அமைச்சர்கள் எஸ்.கீர்த்தனா, எஸ்.கமலி மற்றும் எஸ்.ராஜேஷ் குமார் ஆகியோரின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
தற்போதைய அமைச்சரவை மாற்றம் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இடைத்தேர்தல் வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்து, முன்னாள் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தவெக-வில் இணைந்தவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



