காவிரி நதிநீர் பங்கீட்டில் தங்களுக்கு சேர வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்காததைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது 77 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட வேண்டிய 26.954 டி.எம்.சி நீரில், இதுவரை 4.5 டி.எம்.சி நீர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நீர் பங்கீட்டு விதிமுறைகளை கர்நாடகம் மீறியுள்ளதாகவும், உரிய நீரை விடுவிக்கத் தவறியுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




