தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளை இயக்க அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விதியை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.
பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்த பிறகே கொள்கை ரீதியான முடிவை எடுக்க முடியும் என அரசு வாதிட்டது. அதுவரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விரைவில் கொள்கை முடிவை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




