திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 10:40 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில் தாமதமாக இயக்கப்படும்.
அதன்படி, ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 40 நிமிடங்களும், ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 45 நிமிடங்களும் ரயில் தாமதமாகச் செல்லும். மேலும், ஆகஸ்ட் 27 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்களும், ஆகஸ்ட் 28, 29 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 50 நிமிடங்களும் ரயில் தாமதமாகப் புறப்படும். பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை இதற்கேற்ப மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு பயணிகள் என்.டி.இ.எஸ் (NTES) அல்லது ரயில் மதாத் (RailMadad) இணையதளங்களை அணுகலாம் அல்லது 139 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


