ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெண்களைப் பாலியல் ரீதியாகப் பேசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் பங்களிப்பு அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார். சட்டமன்றக் கூட்டத்தொடரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்றும் பெ.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


