2024-2025 நிதியாண்டில் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை ஏடிஆர் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், திமுக அதிகபட்சமாக ரூ.365.78 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் (ரூ.184.96 கோடி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ரூ.140.04 கோடி) ஆகிய கட்சிகள் உள்ளன.
தெலுங்கு தேசம் கட்சி ரூ.83.04 கோடியும், அதிமுக ரூ.66.30 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ.60 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜனசேனா, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அதிக நன்கொடை பெற்ற முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. தேசிய கட்சிகளின் நன்கொடை விவரங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
நடப்பு நிதியாண்டில் மாநில கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ.1051.556 கோடி நன்கொடை பெற்றுள்ளன. இது கடந்த 2023-2024 நிதியாண்டில் பெறப்பட்ட ரூ.347.693 கோடியை விட கணிசமான உயர்வாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

