முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பாசனத்திற்காக விநாடிக்கு 200 கனஅடி நீரும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக 150 கனஅடி நீரும் என மொத்தம் 350 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பு அடுத்த 120 நாட்களுக்குத் தொடரும்.
தென்மேற்குப் பருவமழை தாமதமானதால், வழக்கத்தை விட இரண்டு மாதங்கள் கழித்து இந்த நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

