எல் நினோ காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் (S&P Global Ratings) நிறுவனம் எச்சரித்துள்ளது. எல் நினோ தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டு, விவசாய உற்பத்தி கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாய விளைச்சல் சரிவடைவதால் உணவுப் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் சூழல் உருவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் எனத் தனது கணிப்பில் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.



