ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராஞ்சியில் உள்ள சட்டமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற வளாகத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல்துறையினர் கலைத்தனர்.




