80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் 'சூப்பர் பிளஸ் ஓடிடி' (Super Plus OTT) என்ற புதிய ஃபைபர் இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 200 Mbps வேகத்திலான இணைய வசதி, 27 ஓடிடி தளங்களுக்கான சந்தா மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இச்சேவையைப் பெற மாதந்தோறும் ரூ. 1,111 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




