ஜார்க்கண்டில் அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மாணவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.




