அரிய வகை குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை அடுத்த அக்கரையில் உள்ள மு.க.முத்துவின் வீட்டில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விக்ரமின் மகள், மு.க.முத்துவின் பேரனை திருமணம் செய்துள்ளார்.
அந்த வீட்டிற்குச் சென்றபோது, விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்த அரிய வகை குரங்குடன் விக்ரம் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.


