கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 மாணவர்களைக் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

